பிரியமானவளே
வேருக்கும் விதைக்கும்.
உள்ள உறவு தான்,
உனக்கும் எனக்கும்!
மலரிடம் மௌனமாய்,
இருந்து,
பயனில்லை என்று தான்,
உன்னிடம்,
என் காதலை சொன்னேன்!
மனதில்,
முதலில் படிந்தது,
அம்மாவின் முகம்,
அதன் பின் படிந்த,
பெண் முகம்,
உன் முகம் தான்!
உன் பதிலுக்காக,
காத்திருந்த தருணத்தில்,
என் உள்ளுணர்வு,
உனக்கு முன்னே,
உன் காதலை,
என்னிடம் சொல்லியது!
உன்னிடம் பிடித்தது,
என்னவென்று,
பழகிய இத்தனை,
நாட்களில் நிறைய சொல்லலாம்,
ஆனால்,
உன்னோடு பழகாமலே,
உன்னை எனக்கு,
பிடித்ததற்கு,
ஒன்று மட்டும் தான்,
காரணம்,
நீ எனக்காக பிறந்தவள்!
என்னை,
நீ நேசிக்கும் அளவிற்கு,
நான் நேசித்தது இல்லை!
காதல் கல்யாணம் வரை,
கை கூடியதற்கு,
காரணம்,
கடவுளுக்கு தெரியும்,
நீ இல்லை என்றால்,
நான் இருக்க மாட்டேன் என்று!
நீ பிறந்ததற்கு,
நான் எந்த,
அளவிற்கு மகிழ்ச்சி,
அடைகிறேனோ,
அதே அளவிற்கு,
நீயும் சந்தோஷ படுகிறாய்,
நான் பிறந்ததற்கு!
எனக்கு ஒரு ஆசை,
உன்னை நேசித்து,
கொண்டே,
நீண்ட காலம்,
வாழ வேண்டும்,
என் கடைசி நொடியிலும்,
உன்னை நேசித்து,
கொண்டே,
............................................................
காதலுடன்,
கார்த்திக்.