அன்னை
நிலவைக் காட்டி
சோறூட்டியவள் தாய்!
சிலேட்டில்
கிறுக்கி கிறுக்கி எழுதினாலும்
முத்து முத்தாக இருக்கிறது என்று
ஆரத்தி எடுப்பவள் தாய்!
தவறு செய்துவிட்டு வந்தாலும்
மன்னித்து ஏற்றுக் கொள்பவள் தாய்!
அவனுக்கென்று ஒருத்தி வந்ததும்
தாய் பாரத்தை
தாரத்திடம் கொடுத்துவிட்டு
தன் மகனின்
அகத்தின் அழகை
முகத்தில் பார்த்து பூரிப்படைபவள்
தாய் மட்டுமே!