இனி ஒரு வழி செய்வோம்
பிறருக்காக வழி செய்தோம் இனியாவது
நமக்கு என்று ஒரு வழி அமைப்போம்
வாழ்க்கை பாதியை கடந்து விட்டோம்
வசந்தத்தை விட சூறாவளிதான் அதிகம்
நேசிக்க மறந்தது இந்த காற்றும் கூட
சுவாசிக்க மறந்த நினைவுகளுடன்
வாழ்க்கை பாதையில் நடை பழகும்
எங்கள் பாதங்கள் முத்தமிட்டது தூரங்கள்
பிள்ளைகள் தோள் கொண்ட பலம் இருக்க
இலக்கை எட்டி விடலாம் இது துணிச்சல்
இறைவனை நாடி சிறப்பாக்கி தர
இனி ஒரு வழி செய்வோம்
இனி என் வழி ! நபி வழி !!
மறை சொன்ன இறை வழி !!
ஸ்ரீவை.காதர்.