விடியலைத் தேடி

விடா முயற்சியுடன்
விரைந்திடு தோழா ! புதியதொரு
விடியலைத் தேடி ! நடையிடு நீ !

நடுங்குதல் வேண்டாம்
நாணுதல் வேண்டாம்
நாளை உலகம் உன் கையில்
நல்லப் படை எடு நீ !

வீழ்ந்தவனும் எழுவான் ஒரு
விடியலைக் கண்டால்
விழும் இலை நீ இல்லையென்று
விழித்தெழு நீ !

நல்லதொரு விடியல்
நமக்குத் தான் என்று
நாள்தோறும் சொல்லுகிறாள்
நம்பிக்கைத் தரும் நிலவு !

வருங்கால பாரதம்
வாகை பூ சூடி மகிழ
வாழ்வினில் என்றென்றும்
வளர்ந்திடு ! விடியல் பல
வளர்த்திடு நீ !

புது விடியல்களைத் தேடி
புனித யாத்திரை மேற்கொண்டால்
பூமியே வெற்றியை உனக்கு
புது விருந்தாய்த் தரும்
புன்னகை உடனே அதை பருகிடுவாய்
புது இன்பதுடனே மேருகிடுவாய் நீ !

எழுதியவர் : விவேக்பாரதி (10-Nov-13, 4:33 pm)
Tanglish : vidiyalaith thedi
பார்வை : 313

மேலே