யார் மீது குற்றம்

நெற்றி வியர்வை நிலத்தில் வீழ
பெற்றவர் வாழ பெருங்கடன் சுமந்து
வாயும் வயிறும் கட்டி வைத்து
வாழ்நாள் முழுதும் உழைத்துப் பெற்ற
பணத்தைத் கொட்டி மக்கள் வாங்கும்
வீடுக ளனைத்தும் சட்டம் மீறி
வந்தது என்றால், கட்டிடம் பலவும்
கட்டும் போது கண்களை ஏனோ
மூடியு மன்று வைத்துக் கொண்டார்
பட்டம் பெற்ற தலைவர்க ளெல்லாம்
சட்ட மியற்றித் தம்மைக் காப்பார்
என்று யெண்ணி வாக்குக ளிட்ட
பாமர மக்கள் முட்டாள் என்றோ
கட்டிய கட்டிடம் மட்டம் தட்ட
பட்டப் பகலில் படையுடன் வந்தார்
லஞ்சம் வாங்கி அரசியல் செய்யும்
கட்சிச் தலைவன் அத்தனை பேரையும்
பட்டப் பகலில் நிறுத்தி வைத்து
சுட்டுத் தள்ள வேண்டு மென்றால்
சட்டம் ஒன்றை புரட்சி மூலம்
இயற்ற வேண்டும் இனி

எழுதியவர் : (14-Nov-13, 2:01 pm)
பார்வை : 79

மேலே