தாகமுள்ள தண்ணீர் குடங்கள்

தெருக்குழாயில்
வண்ணநிறங்களுடன்
வரிசையில் நிற்கின்றன
தண்ணீர் குடங்கள்...
தவறியும் விழுகாத தண்ணீர் துளிகள் ..
வறட்சியில்
வருகைதரும்
கண்ணீர் துளிகள் மட்டுமே நிரம்புகின்றன -
வெற்று குடங்களில்.

# குமார்ஸ் ......

எழுதியவர் : குமார்ஸ் (16-Nov-13, 9:30 am)
பார்வை : 129

மேலே