மோதிரம்

மோதிரம்
**********************
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது,ஒரு ஆங்கிலேய பிரபு மன்னர் ஒருவரை விருந்துக்கு அழைத்தார்.மன்னர் அழகான விலை உயர்ந்த வைர மோதிரம் அணிந்திருந்தார்.ஆவலுடன் அதை பிரபு பார்த்ததைக் கண்ட மன்னர் அதை கழற்றி அவரிடம் காண்பித்தார்.பிரபு அதைத் தன விரலில் போட்டுப் பார்த்தார்.பின் மன்னர் புறப்படும் வரை கழற்றவில்லை.தயங்கியபடியே மன்னர் அதைக் கேட்ட போது பிரபு சொன்னார்,''எங்கள் கைக்கு வந்த எதையும் திரும்பக் கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''

சில நாட்கள் கழித்து மன்னர் பிரபுவையும் அவர் மனைவியையும் விருந்துக்கு அழைத்தார்.அவர்கள் வந்தவுடன் மன்னரின் மனைவி பிரபுவின் மனைவியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார்.

விருந்து முடிந்து பிரபு புறப்படும் போது தன் மனைவியை அழைத்தார்.அப்போது மன்னர் சொன்னார்,''எங்கள் அந்தப்புரம் வந்த எந்தப் பெண்ணையும் திரும்ப அனுப்பும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''

பிரபுவின் கை மோதிரத்தைக் கழட்டியது.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்

எழுதியவர் : கே இனியவன் (16-Nov-13, 1:30 pm)
பார்வை : 164

மேலே