வறுமை

மனித இனத்தில்,
இப்படியும் ஒரு இனம்,
தனிமை பட்டு,

வருடம் முழுதும்,
உண்ணா நோன்பு,
ஆண்டவன் அருள்,
மட்டும்,
இன்னும் கிடைக்க வில்லை,

இறந்த பின்பு,
என்னை தின்று,
தீர்க்க,
கழுகு கூட்டம் உண்டு,
நான்,
இருக்கும் போது,
நான் உண்ண உணவு இல்லை,

பணக்கார வீட்டு,
நாயை விட,
நான் கேவலம்,

பசிக்கும்,
எனக்கும்,
போட்டி,
யார் முதலில்,
யாரை சாப்பிடுவது என்று,

தாயின் கருவறையில்,
இந்த,
வறுமை இருந்திருந்தால்,
நான் இன்று,
தவித்து இருக்க மாட்டேனே,

உடல் உருகி,
சாவதற்கு,
கொடிய நோய்,
மட்டும் இல்லை,
வறுமையும் போதும்,

எந்த சோற்றிலும் ,
என் பெயர்,
எழுத வில்லையோ,

கள்ளி பால் கூட,
கொடுக்க முடியாத,
வறுமையோ,
பெற்றோருக்கு,

எலும்பு கூடுகளாய்,
அலைகிறோம்,
இரக்கம் வர வில்லை,
யாருக்கும்,

சாக்கடைக்கு போகும்,
சாதம்,
தந்தால் கூட,
சந்தோசம் தான்,

மனிதனாய் இனி,
ஒரு,
பிறவி வேண்டாம்,
நாயை விட,
நாங்கள் கேவலம்,

எழுதியவர் : kaarthick (16-Nov-13, 6:35 pm)
பார்வை : 121

மேலே