நெருடல்
இரவின் தொடக்கம்......
கொஞ்சம் கூகிள்,
கொஞ்சம் பேஸ்புக்,
கொஞ்சம் ட்வீடெர்,
நிறைய நண்பர்கள்,
நிறைய விசயங்கள்.
நிம்மதியுடன்
நிமிர்ந்தால் ....
கணினி மடியில்
கட்டாந்தரையில்
குழந்தை.
நெருடத்தான் செய்கிறது ......
கொஞ்சம் அவளை
பேசவிட்டு
கேட்டுருக்கலாம் என்று.
- அம்மா .