மாதவியின் மணிமேகலை
மாதவியின் மணிமேகலை.....
பிறந்தது என் தவறா?
பிறந்த இடம் என் தவறா?
எனக்கும் மனம் உண்டு,
என் மனதிலும் ஆசை உண்டு!
என் மானம் காக்க எத்தனை நாட்கள் ஓடி ஒலிவேன்?
தினம் தினம் விடியல் வரும் என
காத்திருந்த கண்கள் வீணாய் போனது .
என் மானம் காக்கப்பட்டது,
எனக்கென ஒருத்தி இருந்த வரை.
தாய் சென்ற பாதை செல்லாமல்,
சேய் சென்றேன் புது பாதை நோக்கி...
நீங்காத துன்பம்
தாங்காத துயரம் கண்டுவிட்டேன்.
மங்காத ஒளியாய் வாழ்ந்து நிற்பேன்.
மண்டி இட்டு கேட்கின்றேன்.
எனை பார்க்கும் மாந்தர்கள்
என் விலை பேசும் முன்பு
என் நிலை காண விரும்புகிறேன்....
விடியில் தருவார - இல்லை
விலை பேசி விடுவரோ
என தவிக்கும் நெஞ்சம் காண விரும்புகிறேன்....
இயன்றால் விடியில் தாருங்கள்...
அவர் தேடும் விடியல் எது தெரியுமா ?
தெரிந்தால் பதிவு செய்யுங்கள்......................
முனைவர் நந்தகோபால் இராசா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
