எது விபச்சாரம் தெரியுமா

எது விபச்சாரம் தெரியுமா..?

தொட்டிலில் குழைந்தை பசியில் இருக்க, கட்டிய கணவன் படுக்கையில் பிணியில் தவிக்க, தெருவோரம் நின்று பசிபோக்கி பச்சிளம் குழைந்தையும், பாசமிகு கணவனையும் மருந்து தந்து காத்தாள் ஒருத்தி அவளுக்கு பெயர் என்ன....?(தமிழில் படித்து துடித்தது)

அவளினின்று பசிபோக்கிசென்ற அவனுக்கு பெயர் என்ன..?

காசுக்காய் கட்டிய மணையாளை காளையர் போக்கனிடம் விற்றவன் வங்கியன் பெயர் என்ன...?

மகளென்று பாராமல் தன்னாசைக்கொண்டு பாளும் கிணற்றில் தள்ளும் தாயின் பெயர் என்ன..?

கட்டிய மனைவி இருக்க கடைக்கண்ணில், வேறு பெண்ணை காணும் தருணத்திற்கு பெயர் என்ன...?

பாடசாலை சென்ற பெண்ணை களவிட்டு பரத்தையர் இல்லத்தில் சேர்க்கும் கயவனுக்கு பெயர் என்ன..?

பணிக்கு செல்லும் பெண்ணின் கழுத்திற்குக்கிளாய் பார்க்கும் மூடனுக்கு என்ன பெயர்..?

ஒரு பெயரை பெற்றாள் பெண்ணொருத்தி, அவளை பார்த்து குறைபேசி வலிக்க செய்யும் பெண்ணின் பெயர் என்ன..

பிறப்பில் யாரும் விபசாரி இல்லை, வளர்ப்பிலும், சமுதாய சீரளிப்பிலும் ஒரு பெண் விபச்சாரி ஆகிறாள்.. முடிந்தால் உங்களால் இயன்ற உதவி செய்து அவர்களை முறைப்படுத்துங்கள்.

அன்புடன் முனைவர் நந்தகோபால் இராசா
வரைப்பட உதவி மைலாஞ்சி ( Mylanchi )

எழுதியவர் : அன்புடன் முனைவர் நந்தகோப (19-Nov-13, 5:40 pm)
பார்வை : 1292

மேலே