நன்றிகள்

ஏளனம் செய்வோர்க்கும்
எள்ளி நகை யாடுவோர்க்கும்
எதிர்த்து த்திரிவோர்க்கும்
எதிர் வினை யா ற்றுவோர்க்கும்
ஏமாற்று பேர்வழிகளுக்கும்
எகத்தாளம் பேசுவோர்க்கும்
ஏகாந்த நன்றிகள் ..
மன ஊற்றை திறந்து
கவியாற்றில் இளைப்பாற
கற்றுத் தந்த கலியுக
வாழ்வின் கல்வி தந்தைகள் இவர்கள் ,
பொறுமையை போதிக்கும் பேராசிரியர்கள் ..
போதி மரத்தடிக்கு அழைத்து ச்சென்று
புத்தரையே எனக்கு போதித்தவர்கள்.

எழுதியவர் : ஏ .பி .சத்யா ஸ்வரூப் (19-Nov-13, 7:37 pm)
Tanglish : nanRikaL
பார்வை : 90

மேலே