இது முடிவல்ல
உனக்குள் நான் வந்தேன் என்பதற்காக ..
எனக்குள் நீ இருப்பாய் என்று நினைக்காதே ..
நான் சிரித்தேன் என்பதற்காக ..
உன்னை நினைத்தேன் என நினைக்காதே ...
உன்னிடம் பேசி விட்டேன் என்பதற்காக ..
எனக்குள் நீ இருக்கிறாய் என்று சொல்லாதே ..
நான் உன்னை பார்த்ததால் .....
அது காதல் என்று எண்ணிவிடாதே ......
உனக்கு என்னை பார்த்தவுடன் வந்த காதல்
உன்னை பார்த்துக்கொண்டே இருக்கும் எனக்குள் வரவில்லையே...
அதற்காக என்னை இதயம் இல்லாதவள் என்று நினைத்துவிடாதே .....
என்னை மன்னித்துவிடு என்று சொல்லமாட்டேன் ..
மறந்துவிடு என்று சொல்லிவிட்டேன்......
என்று சொல்லி மெல்ல அவள் நகர.....
மெளனமாக நின்றவன் அவளை மெதுவாக அழைக்க ...
பக்கத்தில் வந்தவள் ..
அவன் கண்ணை பார்க்க ...
அவனும் அவள் கண்ணை பார்க்க.....
சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் வந்தது போல் இரு கண்கள் நேருக்கு நேர் பார்க்க ...
அவன் ....
மறந்து விடு என்றாய்...
நினைக்காதே என்றாய் ...
நான் உன்னில் இல்லை என்றாய் ...
பார்த்ததால் காதல் வந்து விடாது என்றாய் ..
பரவாயில்லை என்றேன்....
பக்குவப்பட்ட உன்னிடம்...
எனக்காக ஒன்று செய்வாயா ...
என்வார்தைக்கு மதிப்பு கொடுப்பாயா ....?????
அவன்... காதலை.... ஏற்று கொண்டதை போல் அவள் இமைகள் மூடி திறக்க....
அவன்...
நீ எனக்கு சொன்னதை....
உன் புகைப்படத்தை பார்த்து உன்னை ஏற்றுகொள்ள நினைக்கும்... ..
உன் தாய் , தந்தை பார்க்கும் மாப்பிள்ளையை ...
பார்த்து சொல்வாயா ....
இரண்டு வருடம் என்னை காதலித்தவன் ....
வேண்டாமென்றேன் ....
இரண்டு நாளில் என் புகைப்படத்தை காதலித்த உனக்காகவா என்று......
வருகிறேன் ....
உன்னால் தீர்மானம் எடுக்க முடியும் என்ற நிலை வரும்போது ...என்று கூறி......தன் வழி நடந்தான் ...
""" நிழலை.....
நம்பும் சில பெண்களே.....
நிஜத்தை ஏன் நம்ப மறுக்கிறீர்கள் """"