வாழ்க்கையை வாழுங்கள்

அருகில் இருப்பதை விட
தொலைந்துபோனதற்கு
என்றுமே மதிப்பு அதிகம் !

அருகில் மனைவியாய் இருக்கும்போது
மதிக்காமல் ,
நொடிப்பொழுது கூட பேசாமல் ,
இறந்துவிட்ட பின்
மணிக்கணக்காய் அழும்
இந்த மானுடக்கூட்டம்!

ஆண்களின் காதல்தான்
உன்னதம் ,
பெண்கள் ஏமாற்றித்திரிபவர்கள்
என்று
தாஜ்மஹாலை அடையாளம்
காட்டும் எத்தனை பேருக்குத் தெரியும் ?

ஒருவேளை ...
மும்தாஜ் உயிரோடு இருந்திருந்தால் ,
ஷாஜஹானுடன் அருகில் இருந்திருந்தால் ,
மும்தாஜும் எங்களைப்போல்
இப்படி கவிதை கிறுக்கி ,
அதில் கவலைக் கொட்டி ,
கிறுக்கியாகாமல் இருக்க ,
வழி தேடி அலைந்திருப்பாள் என்று ...

எழுதியவர் : வெற்றிமகள் (22-Nov-13, 4:14 pm)
சேர்த்தது : vetrimahal
பார்வை : 137

மேலே