ஜன்னலுக்கு வெளியே

ஜன்னல் வழியாக
கைகளை நீட்டினேன்.....
வானத்துக்குக் கிடைத்தது
இரு எலக்ரிக் கித்தார்
வானத்தில் விரல்களாய்
வழிகின்ற மழைத்துளிகள்
வெஸ்டர்ன் ட்யூன் என்பது - இதோ
விழுகின்ற மழைச் சத்தம்
இசைக்கிறது இதயம் - கவிதையால்
இனிக்கிறது நிமிடம்.....!