நாராயணசாமிக்கு

நாராயணசாமிக்கு தற்போது பார்த்துவரும் பணியை தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளதால், ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

ஒரு நாள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டார்.

அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்,

“புயல் வருமானால் என்ன செய்வீர் ?” என்று.

நாராயணசாமி சொன்னார்,

“நங்கூரத்தை நாட்டுவேன்”என்று.

“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”

இப்படியே கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில்,

“…பத்தாவது புயல் !” என்றார் தேர்வு நடத்தியவர்.

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”

“ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”

நாராயணசாமி சொன்னார்,

“தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான்”

நன்றி ;மயூரேசன்

எழுதியவர் : மயூரேசன் (25-Nov-13, 4:35 pm)
பார்வை : 125

மேலே