மக்கிப்போன சுதந்திரம்
தியாகி பென்சனுக்காக
காத்திருந்து காத்திருந்து
அதை வாங்கும் முன்னே
தியாகி மக்கி போய்விட்டான் ....
ஏழைகளுக்கு இலவச
பட்டா என்று அரிக்கை செய்துவிட்டு
அந்த இடங்கள் மட்டும் மக்கி போய் கொண்டே
இருக்கிறது ஆனால் ஏழைகளுக்கு இன்னும்
பட்டா இல்லை ....
மீனவர்களுக்காக
எத்தனையோ குறள் கொடுத்தும்
இன்னும் மீனவர்களுக்கு பாதுக்காப்பு இல்லை
தினமும் பத்திரிக்கையில் இலங்கை கடற்ப்படை
தாக்குதல் தமிழக மீனவர் பலி என்ற
தலைப்பைதான் பார்க்க முடிகிறது ....
எங்குபார்த்தாலும்
கொலை
கொள்ளை
கற்பழிப்பு
ஏமாற்றம்
மோசடி
ஊழல்
விபத்துகள்
வன்முறை
குண்டு வெடிப்பு
குழந்தைகள் கடத்தல்
நரபலிகள் ....
என நாடே மக்கிபோய் கொண்டிருக்கும் போது
இப்படி மக்கிப்போன
சுதந்திரத்திற்கு எதற்கு
சுதந்திரதின விழா ....
நந்தி