அழிவுக்கு ஓர் ஆராத்தி
வாங்க எடுக்கலாம் அழிவுக்கு ஓர் ஆராத்தி .....
 
 மரங்களை வெட்டி 
நீரை மாசு படுத்தி 
நச்சுப்புகை  தரும் பொருட்களை எரித்து 
அழிவில்லா பொருட்களை மண்ணில் புதைத்து 
     அழிவுக்கு எடுக்கலாம் ஓர் ஆராத்தி ......
செயற்கை உரமிட்டு மண்வளம் கெடுத்து 
உணவிலும் மரபினமாற்றம் செய்து 
  மாற்று வழியில் புதிய நஞ்சை உண்டு 
காசு கொடுத்து மாசு வாங்கி 
சிறிது சிறிதாய் உலகை அழிக்கலாம் ......
நம் அழிவுக்கு ஆராத்தி நாமே 
     எடுக்கலாம் வாருங்கள் .......
 
                    

 
                                