நட்பு - நண்பேன்டா

நட்பு என்னும் மலையினிலே
நான் செதுக்கிய ஓவியம் நீ
அந்த ஓவியத்தின் நிறம் வெண்மை
ஏனென்றால்
உன் மனத்தின் நிறமல்லவா அது !!!

-----------------------------------------------------------

வானம் என்பது பரந்தது -நம்
---------மனம் என்பதும் பரந்தது
நட்பு என்பது சிறந்தது - நம்
---------நட்பு என்பது மிகச்சிறந்தது

-----------------------------------------------------------

துணிவு என்பது
ஆண்மையின் இலக்கணம் !

மென்மை என்பது
பெண்மையின் இலக்கணம் !!

நட்பு என்பது
உலக மனிதனின் இலக்கணம் !!!

-----------------------------------------------------------

வீரர் என்றால் எழுச்சி
கோழை என்றால் இகழ்ச்சி
மழை என்றால் மகிழ்ச்சி
போர் என்றால் புரட்சி
உள்ளம் என்றால் உணர்ச்சி
நட்பு என்றால் அது உயர்ச்சி !!

----------------------------------------------------------

காற்று அடித்தால்
நாணல் சாயும்
புயல் அடித்தாலும்
உண்மை நட்பு சாயாது !!!


-----பள்ளிக்கால கிறுக்கல்கள் ----

எழுதியவர் : வானதி (28-Nov-13, 11:19 am)
பார்வை : 380

மேலே