இடைத்தேர்தல்
சுரண்டி வழித்து
மிச்சத்தை போட்டாலும்
பிச்சைக்குணத்தால் கையேந்துவான்
பிச்சைக்காரன் !
மனித சாணத்தை
பணத்தாளில் சுருட்டி கொடுத்தாலும்
இலவசபுத்தியில் எச்சில்கள் வழிய
இச்சையோடு வாங்குகிறான்
வாக்காளன் !!
உரிமை நிர்வாணமானால்
அவனுக்கென்ன?
புடவை வேட்டி
மானம் காக்குமே
மின்சாரம் சமாதியானால்
அவனுக்கென்ன ?
காமாட்சி விளக்கு
ஒளிகொடுக்குமே
வாக்காளனின் மேற்பார்வையில்
ஜனநாயகமென்ற பத்தினி
பணநாயக காமூகனுடன்
படுக்கை அறையில்..
கோமாரி நோயில்
கால்நடைகள்.
கால்நடைத்துறை
ஓட்டு தீனிக்கு
மேய்ச்சல் பணியில்...
மின்சாரம் பற்றாக்குறையில்
தமிழகம்.
மின்சாரத்துறை
வாக்கு மந்தைவெளியில்
சேகரிப்பு பணியில்....
கொலை, திருட்டு
கற்பழிப்பு குற்றங்களில்
மாநிலம்.
அரசாங்கத்தின்
கவனம் முழுவதும்
வாக்குப்பெட்டியில்...
எதற்கு இந்த இடைத்தேர்தல்.. ?
முடிவு தெரிந்த வினாவிற்கு
வாக்கு தேர்வு எதற்கு ?