அன்பு தோழிக்கு
மனம் சொல்ல நினைக்கிறது
எழுதுகோல் எழுத துடிக்கிறது
வர்ணிக்க வார்த்தைகள் இல்லையடி
இருந்தும் வர்ணிக்கிறேன்
வார்த்தைகள் அழகுற...
உன்னை கண்டதும் தலைகவிழிந்த
வெண்ணிலவு
உந்தன் உரசலால் தூய்மையுற்ற
தென்றல்
உன்னில் உறவாட தேனாக சுரந்த
மழை
உன்னுள் தவழிந்திட ஆசை கொண்ட
அருவிகள்
உன்னை அலங்கரித்த மலர்கள் எத்தகைய
வாசம்
உந்தன் காலடிசுவடுகள் மனித இனத்தின்
வழிதடம்
உந்தன் அழகூர்ந்த புன்னகை எதிரிகளின்
பொக்கிஷம்
உந்தன் ஆயுதமற்ற போருக்கு சமர்பனமானது
வெற்றி
உந்தன் வார்த்தைக்கு இசைந்து நின்றதடி
உலகம்
உந்தன் விழிகளால் சிறையுற்ற பறவைகளின்
சுதந்திரம்
உன்னுள் வாழமுடியாததை எண்ணி வருத்தமுற்ற
கோபம்
எத்தகைய தவம் செய்தேன் இத்தகைய
தோழி கிடைத்திட....