போற்றுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்

அன்பிலே ஆதிபகவன் !
பண்பிலே பகலவன் !
கடமையில் கதிரவன் !
சுவைபட பேசுவதில் சூரியன் !
நேர்மை உங்களின் சொத்து !
திறமை உங்களின் திருப்பம் !
எளிமையின் பங்காளன் !
ஏழையின் நண்பன் !
கண்ணியத்தின் கடவுள் !
கட்டுப்பாட்டின் நிறைகுடம் !
வாழ்த்திற்கு அப்பாற்பட்டவன் !
வணங்குதற்கு உரியவன் !
போற்றி உன்னை பாக்கள் பாட
ஆசை எனக்கு ! புகழுரையை
விரும்பாத ,பூமித்தாய்
பெற்றெடுத்த இம்மண்ணின்
மைந்தன் நீங்கள் !வாழ்க !வாழ்க !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Dec-13, 5:13 pm)
பார்வை : 82

மேலே