இலவச புழுக்கள்

ஓட்டெனும் மீன்பிடிக்க
தேர்தலெனும் தூண்டிலில்
இலவசமெனும் புழுக்கள்....
புழுவிற்கு ஆசைப்பட்டவர்
தொண்டைகளை பதம் பார்த்தது
தூண்டில் முள்...
வலியோடு காத்திருந்தனர்
அடுத்த தேர்தலுக்காய்..
ஐந்து வருடம் கடந்த பின்
வந்தது அடுத்த தேர்தல்...
இந்தமுறையும்
அந்த தூண்டிலில்
புழு நெளிந்து கொண்டிருந்தது
புழுவை பார்த்தவர்கள் வாய்களில்
நீர் சுரக்க தொடங்கியிருந்தது.....