கல்வி

காலியாய் இருக்கும் மூளைக்கு
கலர் அடிக்கும் வேலை !
இருண்ட இதயத்தில்
ஒளி கூட்டும் சாலை !
காய்ந்து விட்ட இடத்துக்கு
நிழல் வேயும் ஓலை !
கற்பக விருட்சமாய்
கற்பிக்கும் சோலை !
வருங்காலம் காட்ட வந்த
வரலாற்று ஜோதி
வற்றாமல் அறிவூட்டும்
வசந்த கால அமுதம்
வாழ்க்கை பாடத்தை
வடித்து எழுதும் பலகை
பாதிப்புகளை தள்ளி
போதிப்புகளை அள்ளித் தரும்
புதையல் சுரங்கம்
அறிவுலக வாதிகளை
அவதரிக்க செய்யும் சுரங்கம்.

எழுதியவர் : கொங்கு தும்பி (7-Dec-13, 11:47 am)
Tanglish : kalvi
பார்வை : 783

மேலே