மறுமணம் வேண்டாம்

மறக்க முடியவில்லை...
உன்னை
வெறுக்க முடியவில்லை!
இளமையை
இசைக்க முடியவில்லை!
நீயும் நானும்
இணைய முடியவில்லை!
தனிமையில் நிலவை
தடுக்க முடியவில்லை
பங்குபோடும் தனிமைக்கு
நிலவைத் தவிர
நிகர் ஏதுமில்லை!
உனக்கு நிகராக
எவருமில்லை..
எவரையும்
ஒப்பிடவும் இயலவில்லை!
உனக்கான உணர்வுகளைப்
பகிர்ந்துக்கொள்ள விருப்பமில்லை
அந்த துணிவு
துளியும் எனக்கில்லை!
உன் நினைவைத்
திருமணம் செய்தேன்
அதில் தினமும்
வாழ்ந்து மகிழ்ந்தேன்!
மறுமணம் வேண்டாம்..
வேண்டவே வேண்டாம்!
இந்த விவாகரத்து மட்டுமே
போதுமானது!