நித்தம் நித்தம்
நித்தம் நித்தம்
புதுத்துணி
மகிழ்ச்சியாகும் மனமே
மறைக்கத்
துணியின்றித் திரியோரை
நினைக்க மனமில்லையோ...!!!
நித்தம் நித்தம்
புது உணவு
சுவையில் வயிறு
நிறைந்ததோ ?
பஞ்சத்திலே பட்டினியின்
பிடியிலே
ஒருவேளை உணவுக்குப்
போராடும்
பிஞ்சு வயிற்றை
நினைக்கவில்லையோ...!!!
நித்தம் நித்தம்
லட்சம் சம்பளம்
நிறைந்த கை
வரியோருக்குக் கொடுக்க
நீளவில்லையோ...!!!
நித்தம் நித்தம்
பரந்த மனைப்பரப்பு
குறுக்கியதோ உன்மனத்தை
குறுக்குவது அழுத்த
விரிவாக்கச் சொல்லலையோ...!!!
நித்தம் நித்தம்
விழாக் கொண்டாட்டம்
வேண்டாமலிருக்கும் மனிதர்களுடன்
கடவுளின் மைந்தர்களை
மனக்கண் காணவில்லையோ...!!!
பகட்டிற்கு பாரிவள்ளலானது
மனதைக் குத்த
குத்தியதில் வந்த குருதி
முழுமனதுடன் கொடுக்க
வற்புறுத்தவில்லையோ...!!!