மனிதர்கள் நிஜம்தானா

எலும்போடு சதையுமாய்
இயங்குவதற்கு இதயமும் மூளையும்
ஏனைய உடல்பாகங்களும்
இயற்கையாய் வந்துபோகும் மூச்சும் .........

கைகால்களும் கச்சிதமான உடலும்
கண்கொடுக்கும் பார்வையும்
கலையான முகமும் பேச்சும்
பிறரை கவருகின்ற தேஜசும் ............

சிந்தித்து செயலும் சீர்மிகு அறிவும்
அனைத்தையும் அடிமையாக்கி
அவன் ஆடும் ஆட்டமும்
அடங்கிய பின் அமைதியும் ........

இதுதானா மனிதனுக்கு
மனிதனின் காட்டிய அடையாளங்கள் ?

இரக்கமும் கருணையும்
இணையில்லாத அன்பும்
மனிதனின் மனதிலிருந்து
மறைந்துபோன மர்மம்மென்ன ..........

நேர்மையும் நீதியும் கதைகளோடு போய்விட
நடைமுறையில் நடப்பவர்கள்
நம்மிடத்தில் எத்தனைபேர்
செய்யவேண்டியவைகள் எவ்வளவோ இருக்க
செய்ய கூடாததை தேடிதேடி செய்கிறான் ...........

உள்ளொன்றும் வைத்து புறம்மொன்று பேசும்
முகபூச்சுக்காரர்களின் மாய உலகத்தில்
உண்மையான மனிதரெல்லாம்
ஊமையாய் மடிந்துபோகிறார் ..........

தன்னலமே தேடிடும் சுயநல உலகத்தில்
பொதுநலம் பொழுதுபோக்கு பேச்சாகிவிட
சொத்துக்கும் பத்துக்கும் சண்டை மூண்டு
சொந்தங்களுக்குள் எத்தனை சோதனை .......

கடவுளின் கட்டளைகளை காற்றில் பறக்கவிட்டு
கண்போனபோக்கில் காலம் கழிக்கிறான்
தானே கடவுள் என்கிறான்
தன் தவறுகளை நியாய படுத்துகிறான் ...........

சத்தியமும் நீதியும் பணம்கொடுத்து வாங்கும்
விலைபொருளாகிவிட்ட வேதனை நிலைமை
பட்டறையில் வடிக்கும் பாதிகத்திகள்
பழம்வெட்டுவதற்கு பதில் படுகொலைசெயகிறது..

எமனையே ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களின்
கொடிதான் ஏகபோகமாய் பறக்கிறது
உதவுவதாய் கூறிக்கொண்டு உன்கால் இழுக்கும்
உத்தமர்கள்தான் உலவும் உலகமிது ...........

பண்புகெட்ட வார்த்தையாலும்
நெறிகெட்ட நடைமுறையாலும்
கூறிய கத்திகளால் ரத்தம் சிந்துகிறது
எத்தனையோ நல்ல உள்ளங்கள் இன்றுவரை ....

ஆயிரம்தான் சுதந்திரம் பெற்றும்
அவரவர்கள் அடிமையாகிக்கிடக்கின்றனர்
ஏதோ ஒன்றிடம் இரக்கமற்ற மனிதர்களாய் .........

தொடரும் ................

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Dec-13, 2:22 pm)
பார்வை : 82

மேலே