புதிய ஆத்திசூடி

அறிவை தேடு,
ஆனந்தமாய் வாழ்ந்திடு,
இயன்ற அளவு உதவி செய்,
ஈகை குணத்தை வளர்த்துக்கொள்,
உண்மை என்றும் பேசு,
ஊக்கமுடன் உழைத்திடு,
எண்ணம் என்றும் நல்லதாய் இருக்கட்டும்,
ஏணியாம் பெற்றோரை மதித்திடு,
ஐயம் என்றும் வேண்டாம்,
ஒற்றுமையாக வாழ்ந்திடு,
ஓதாமல் இருக்காதே,
ஔவையார் சொன்னதை நினைவில் கொள்,

அனைத்திற்கும் மேலாக,
இதயம் சொல்வதை கேட்டு வாழ்,
சந்தோஷம் என்றும் நிலைத்திடும் ......

எழுதியவர் : Beni (8-Dec-13, 4:42 pm)
பார்வை : 110

மேலே