தோல்வி வெற்றிக்கே - சிஎம்ஜேசு

வளரும் விழுதுகளுக்காக
இலைகள் வீழ்த்தப்படுகின்றன

புலரும் காலைக்காக
பொழுது சாய்ந்துபோகிறது

வாட்டிடும் ரணங்கள் எல்லாம்
ஆறிடும் வடுகளாய் நாளை

விழுந்தாலும் பிறரோடு இணைந்து
தூக்கி விடுகிறது நம்மை சாலை

கல்வியில் தோல்விக் கண்டால்
இன்னும் படியென கட்டித் தழுவுகிறது முயற்சி

காதலில் தோற்றுபோனால்
கல்யாணத்தால் கட்டியனைக்கிறது வெற்றி

சூழல்கள் சுழற்ச்சிகளாகி
தோல்விகள் வெற்றிக்கே வித்திடுகின்றன

எழுதியவர் : சி.எம். ஜேசு (8-Dec-13, 8:20 pm)
பார்வை : 68

மேலே