+குழந்தைகள் அழகு+

குழந்தைகள் என்ன பேசினாலும் அழகு!
குழந்தைகள் தமிழில் கொஞ்சி கொஞ்சி என்ன பேசினாலும் அழகு!

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகு!
புரியாத வயதில் செய்யும் குறும்புகள் ஒவ்வொன்றும் அழகு!

குழந்தைகள் என்ன அணிந்தாலும் அழகு!
அவர்கள் எப்போதும் புன்னகை அணிந்திருந்தால் மிக மிக அழகு!

குழந்தைகள் எங்கு இருந்தாலும் அழகு!
ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியவர்கள் அவ்வப்போது குழந்தைகள் போலிருந்தால் வாழ்வே அழகு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Dec-13, 10:02 pm)
பார்வை : 125

மேலே