பாரதியார் இன்றிருந்தால்

பாரதியார் இன்றிருந்தால்
வாய் விட்டுச் சிரித்திருப்பாரோ
அன்றி மனம்நொந்து அழுதிருப்பாரோ
வையகம் போகும் போக்கைப் பார்த்து ...!
இன்றைய நூற்றாண்டை
அன்றே கண்டவர் மனம்தனில்
ஆயிரமாயிரம் கற்பனைகள்
மங்கையர்தம் வாழ்வு குறித்து..................!
பெண்ணைப் போகப் பொருளாக்கி
மீண்டும் கற்காலம் நோக்கி
மடமையுடன் வழிநடத்தும்
இன்றைய ஆண்களைப் பார்த்திருந்தால்..!
வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடவும்
காலநேரம் பாராமல் படுத்துறங்கி
பிள்ளை பெற்றுப் போடும் யந்திரமாகவும்
இன்னும் எத்தனை நாளைக்கு அதையே..!
அகப்பை விடுத்து, கல்வியில் முன்னேறி
ஆகாயம் நோக்கி பெண்கள் பறந்திட்டாலும்
கிராமத்து சிந்தனைகள் கிணற்றுத் தவளையாய்
ஆதிக்க சமுதாயத்தின் அடிமை சாசனமாய்..!!
------------------------------------------------------------------------