நாம் விதைத்த நம் விதிப் பயிர்கள்,,,எளிய தமிழ் வழக்குநடை

நாம் விதைத்த நம் விதிப் பயிர்கள்,,,
(எளிய தமிழ் வழக்குநடை)

அடகுபோன அத்தெருக்கள்
வானொலி உருக்கங்களினால்

விதிகளின் பேச்சுக்களோடு
அபராதம் வைத்தபடி உழலுகிறது
அன்றைய உழைப்புகளை

காணா வர்ணப் பூச்சுக்களின்
சாயல்கள் ஒவ்வொன்றும்
திருகு சுருள் புகைமண்டலமாகிவிட

உதட்டு வரை தொட்டுவிட்ட சுவாசங்கள்
குருதி கலக்க தயங்குகிறது

அலசிப் புரளுகிற சல்லாபக் கண்களுக்கு
அவசானித்தக் கலாபங்களின்
மீட்டெடுப்புகளைக் கொடுப்பதற்கெனவே

நிர்மலக் காட்சிகளாக
சில குப்பை மேட்டின் கிழிந்த படுக்கைகள்

துயர்வாருகிற இயற்கைச் சதியொன்று
நெருங்குகிறதையும் அறியாது

நட்டு வைத்த மரக் கன்றினோடு
எதிர்காலங்களை சொல்லுகிறது
அறியாமைகளின் விரல்மடிப்பு எண்ணிக்கை

கருத்திற்கு உட்பட்ட புறப்பாடுகள்
கவனிப்பாரில்லாத முன் கோணங்களினால்

திசை மாற்றிக் கொடுக்கின்ற
அல்லல் களெல்லாம் அனுபவங்களாகிறது
அத்தனையையும் இழந்த பிறகு

ஊழல் கட்டி யணைத்திருக்கின்ற
குறும்புத்தி இருள் கூடுகள்

விரிசலொளி தப்பித் தப்பி
ஞாயங்கள் சொல்லி அபிநயிக்கின்ற
சுயநலக் கூத்து விரிப்பு இ(ழி)ச்சமுதாயம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (11-Dec-13, 6:08 pm)
பார்வை : 115

மேலே