பாரதிக்கொரு சாரதி

பாரதி என்பான் உலக கவி
---பா ரதமேறி தமிழ் கவியால்
பாரதம் முழுதும் பவனி வந்தான்
---பார்போருக் கெல்லாம் நலங் கொடுத்தான்
பாரது கண்டு போற்றி வியக்க
---பாக்கள் பல புனைந்த அவனுக்குச்
சாரதி யானாள் தமிழ் அன்னை
---காலத்தை பாரதி வென்று விட்டான்

தமிழுடன்
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Dec-13, 5:31 pm)
பார்வை : 184

மேலே