மறையோனே

மறையோனே துயர் தீர்பவனே
வல்லோனே வையகத்தை ஆள்பவனே
தேடுகிறேன் உன் அருட்கரத்தை
சரணடைவேன் உன் திருப்பாதத்தில்
என்றே முழங்கிட உன்னையே தொழுதிட
அருள் புரிவாய் ரஹ்மானே

துறந்திடு இன்றே உலகம்
அடைந்திடு மறுமையின் சொர்க்கம்
மறந்திடு பெண்மையின் போகம்
உணர்ந்திடு அதுவே யோகம்

நடுநிலை நாடுவாய் என்றும்
இறை அன்பினை பெறுவாய் என்றும்
இபாதத்தை புரிந்திடு நன்றே
நப்சை அடக்கிடு இன்றே

இறை அறிய மனம் ஒன்று உண்டு
அது இக்லாஸ் என்னும் தன்மையில் உண்டு
உலகில் சவால் உனக்கு முன்பு
துயோனை போற்றிடு அதுவே இறைப்பண்பு

விட்டுவிடு ஆசையை இன்று
உனக்கு கிடைப்பதோ மறுமையில் சான்று
என்றும் முழங்கிடு அல்லா
மா நபியை அழைத்திடு யா ரசூலில்லாஹ்

இறை நேசரை நாடிடு நாலும்
இறை நேசராய் மாறலாம் நீயும்
இறையோனை அடைந்திட நீயும்
வலிமார்கள் துணையினை நாடு

ஏகனை அறிந்திட நீயும்
நபி மொழியை உணர்ந்திட வேண்டும்
பொறுமையை பெற்றிட வாழ்வில்
நபி வழியில் நடந்திட வேண்டும்

ஞானிகள் தேடும் இரையை
மறையோன் மறையில் உரைத்தான்
சத்தியம் இதுவே சொல்வேன்
அண்ணலின் நபி மொழி வழியே

எழுதியவர் : (12-Dec-13, 10:05 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 86

மேலே