சத்தியம்
விண்ணையும்
மண்ணையும்
ஆள்பவன் இறைவன்
தியான முறைகளை
அளித்தவன் இறைவன்
வய்யகம் போற்றிடும்
வள்ளவன் இறைவன்
மறைவாக
வாழ்பவன் இறைவன்
தன்னை தானே
அறிந்திடுவோமே
ரகசிய
நிலையை
உணர்திடுவோமே
மறைமொழி
அறிந்து
நடந்திட நீயும்
ஆன்ம பலம்
பெற்று வாழ்ந்திட
வேண்டும்
ஞானிகள்
வழியில்
சென்றிடுவோமே
உயர்ந்த பண்பினை
பெற்று
வாழ்திடுவோமே
சுகபோக வாழ்வை
அடைந்திட
நீயும் கவலையை
எரித்து கரைத்திட
வேண்டும்
வல்லோனே என்று
போற்றிடுவோமே
தோல்விகள்
மண்ணில்
புதைதிடுவோமே
வலிமார்கள்
கரத்தைபிடித்திட
நீயும் மகிழ்ச்சியின்
மலையில்
நனைந்திட வேண்டும்
ஆணவம் இன்றே
ஒழித்திடுவோமே
குரு திட்சைகள்
பெற்று
வாழ்திடுவோமே
இறை சூட்சம
சக்தியை
அடைந்திட நீயும்
சாகா வரம்
பெற்று வாழ்ந்திட
வேண்டும்
உயிரையும் உடலையும்
வளர்த்திடுவோமே
நமனையை வென்றிட
அறிந்திடுவோமே
ஏகனாய் ஒன்றிட
கலந்திட நீயும்
சித்தர்கள் பாதையை
தெரிந்திட வேண்டும்
கேற்பவன்
பார்ப்பவன் அவனே
இறைவன்
காணும்
திசைகளும்
அவனே
இறைவன்
சத்தியம் இதுவே
அறிந்திட
வேண்டும்