கடவுளிடம் பேசுகிறேன் தினமும்

அன்று....

அன்னையே....
பத்து மாதம் வரை
சிப்பிக்குள் முத்தாய்
சுமந்தாய் என்னை
என் அன்னை....!!!!!

மண்ணில் வைரமாய்
பெற்று எடுத்தாய் என்னை
என் அன்னை....!!!!!

கண் இமையாய் காத்து
வளர்த்தாய் என்னை
என் அன்னை.....!!!!!

இன்று....
தொலைவில் நீ இருந்தாலும்
தொலைபேசியில் அருகில் இருக்கிறாய்
தாயே என் தாயே...

தூரத்தில் நீ இருந்தாலும்
துயரத்தில் என்னை விட்டதில்லை
தாயே என் தாயே...

அந்த கடவுளை கும்மிட
மறந்து இருப்பேன்
தாயே என் தாயே...

இந்த கடவுளை தொலைபேசியில்
குப்பிட மறந்ததில்லை
தாயே என் தாயே.....

என் தொலைபேசிவும்
தெய்வமானது - உன் குரல்
ஒலிக்கும் வரை
தாயே என் தாயே....

உன் குரல் நின்றதும்
பொய்மையானது தொலைபேசி
பொம்மையனது
தாயே என் தாயே.....

இது தான்
தொ(ல்)லைபேசியோ!!!!!

எழுதியவர் : இதயவன் (13-Dec-13, 10:35 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 173

மேலே