ஏங்கும் இரு இதயங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
:-*உன்னைப் பார்க்க துடித்து துடித்து கண்கள் துவண்டு போய்விட்டது... துவண்டு போன கண்களுக்கு உன்னை அறிமுகம் செய்வாயா இல்லை, மனதை கல்லாக்கி என் உணர்வுகளை சிறையிடுவாயா விரைவில் உன் பதிலுக்காக காத்து நிற்கும் இதய துடிப்புகள்................... :-)அன்பே நீ கேட்கும் கேள்விகள் என்னை தீயாய் சுடுது... எனக்கும் ஆசைதான் உள்ளத்தின் உணர்வுகளுக்கு உயிர்க்கொடுத்து உன்னோடு வாழ என் செய்வேன், குடும்ப துயரங்களோ உயிரோடு கலந்த உன் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கும் உயிர்க்கொல்லியாய் ஆகிவிட்டதே...................... :-*என்னைக் காதலித்த பின் கருங்கல் இதயம் கண்ணாடியாய் பிராகாசித்தது அதில் வார்த்தைகள் வீச மனமில்லை வீசாமல் இருக்கவும் முடியவில்லை என்னைவிட்டு வேறு பெண்ணை மணக்கும் தருணத்தில் உந்தன் இதயம் உடைந்து பல துண்டங்களாய் சிதறும், சிதறிய ஒவ்வொன்றும் என் நினைவுகளையே சித்தரிக்கும்....................... :-)உன் கோவத்தீயில் வேகுவது என்னுடல் மட்டுமே, இதயம் உனைப் பிரிந்தன்றே மடிந்துவிட்டது... உயிர் உனைவிட்டகன்றாலும் காதல் உன்னிடத்திலே வாழும்... அன்று காதலுக்கு கட்டப்பட்டது தாஜ்மகால், இன்று என் இதயமகால் அந்த காதல் கோட்டையோ அனைவருக்கும் தெரிந்தது எந்தன் இதயக்கோட்டையோ என்னுடன் மாய்ந்து போனது யாருக்கு தெரியும் என் உயிர் கலந்த தேவியே.....................