தண்ணீர் ரோஜாக்கள்

அன்று காலை ஏன் அவ்வளவு பரபரப்பு என்று ,நிஷா, நிஷா! தெருமுனையுல இருந்தே கத்தி கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தார், நிஷாவின் அம்மா பாக்கியம். நிஷாவை வீடு முழுவதும் தேடியும் காணவில்லை ! பாக்கியம் அவளின் செல் நம்பருக்கு டயல் செய்தாள். நிஷா அம்மாவின் அழைப்பை துண்டித்தாள். பாக்கியம் கோபத்தில், 'இந்த பொண்ணு என்ன பண்ற எங்க போறான்னு தெரியல .ஆண்டவா!!! என்று சலித்துக்கொண்டு, அழுக்குத் துணிகளை துவைக்க எடுத்தாள்.அப்போது ஹாலில் , " தண்ணீர் ரோஜாக்கள் என்ற தலைப்பின் கீழ் இருந்த வரிகளை படித்துவிட்டு, கடிதத்தை கீழேயே போட்டுவிட்டு வேகமாக வெளியில் கிளம்பி ஆட்டோ பிடித்து, ஆட்டோ ஓட்டுனரை அவசரப்படுத்தினாள். அவரும் ரேஸ் கணக்கா பறந்தார். பாக்கியம், பாக்கியம் என்று அழைத்து கொண்டு சிவராமன் உள்ளே வந்தார். வீடு முழுவதும் பார்த்துவிட்டு, எங்கே போன பாக்கியம் என்று சட்டையை கழுட்டியவர், அந்த பேப்பரை பார்த்துவிட்டு , பாக்கியம், பாக்கியம் என்று கத்திக்கொண்டு வண்டியை கிளப்பி வேகமாக ஓட்டினார். மம்மி! மாம்!!...ஹே நிஷா என்று அழைத்து பதில் கிடையாமல் நொந்துபோன ஸ்ரீ, வீட்ட பூட்டலை, எங்க போனங்களோ என்று சோபாவில் சாய்ந்தான். கீழ இருந்த பேப்பரை பார்த்துவிட்டு, தன்னுடைய Debit கார்டு தொலைந்துவிட்டதாக தகவல் குடுத்து, தன் கார்டை பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டான். Relaxa சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சிவராமன் அழைப்பு வந்தது. மொபைல்-இல் hello! சொன்ன குரலுக்கு பதில், டேய் ! எங்கட இருக்க? என்ற கேள்வி.அப்பா என் debit கார்டு காணோம். அதன் டென்ஷன் என்று சொன்னான். டேய் கார்டு என்கிட்டே தாண்ட இருக்கு, என்று சொன்னார். மறந்துட்டியா? என்றார். ஐயோ! அப்பா நான் அத பிளாக் பண்ணிடேனே! என்று சொல்லி , எனக்கு வர வர ரொம்ப மறதி என்று சொல்லிவிட்டு,தனக்குள் சிரித்தான்.அதிர்ச்சியில் ,சட்டைப்பையில் இருந்த அவன் டெபிட் கார்டை பார்த்து நீ குடுத்துவச்சவன்டா, ஸ்ரீ ! என்று சொல்லி, தன் முன்னாடி இருந்த நிஷாகிட்ட தன்னுடைய டெபிட் கார்டு குடுத்தார் சிவராமன் . பார்த்து செலவு பண்ணுமா!!! என்றார் , அவள், Dad ! u dont worry , என்று சொல்லி ஒரு கடையுனுள் சென்றாள். உள்ளே இருந்த பாக்கியம் , நிஷா, வா! வா! என்று அழைத்தார். " தண்ணீர் ரோஜாக்கள் " என்று எழுதப்பட்டு வரிசையாய் பூந்தொட்டிகள் இருந்தன . தண்ணீரில் ரோஜாக்கள் மிதந்து கொண்டிருந்தன.அந்த அழகிய பூந்தொட்டிகளை அதிகமாக வாங்குவோருக்கு பரிசுகளும்," அழகிய ரோஜா மகள் " என்ற அழகி போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பும் உண்டு, என்ற அறிவிப்புகளும் இருந்தன. கையில் பில்லை வைத்து கொண்டு, நிஷாவும், பாக்கியமும் " அழகிய ரோஜா மகள் நானோ? என்ற கற்பனையில் இருந்தனர். கடை வாசலில் சிவராமன் தன்னுடைய account balance " ஜீரோ" என்ற நிஜத்தில் இருந்தார். சோபாவில் படுத்துக்கொண்டு, "கலக்கிட்டட ஸ்ரீ ! கல்யாணம் பண்ணுவதற்கு உண்டான எல்லா தகுதியும் உனக்கு வந்துருச்சுடா !!! என்று சொல்லி பெருமையில் இருந்தான் ஸ்ரீ !

எழுதியவர் : கே.பிரேமலதா (எ) யோகர்சன்னா (14-Dec-13, 4:27 pm)
சேர்த்தது : yogarsanna
Tanglish : thanneer rojakkal
பார்வை : 267

மேலே