விருதுகள்---2013 ---மிகு நிறை ஆக்க மாமணி2013

மிகு நிறை ஆக்க மாமணி...2013

தளத்தின் படைப்பாக்கங்கள் நொடிதோறும் பலபல
வளம் அது தமிழுக்கு. உரம் அது தமிழ் வளர்ச்சிக்கு.
குளமாகும் கண்கள் சில ஆக்கங்களால் மகிழ்ந்து
உளம் நோகும் சமயங்களில் சிலவற்றால் சிவந்து

கருத்தே வாராமற் புள்ளிகள் சேராமல் இருந்தும்
உறுத்தும் பொழுதுகளை மறந்தே -நாளும் மனம்
தளராமல் தொடர் படைப்பு அளிப்பது ஓரு தவமே
தளத்தில் இவ்வகையில் மிகு நிறை ஆக்கங்கள் அளிப்பதில் முன்னணியில் உள்ளவர் இவர் -ஒரு
துளிப்பாவும் ஒரு படைப்பாம்.தவறேது இதில்?
சலிக்காமல் அலுக்காமல் படைப்பளித்தார் இவர்
தலுக்கு குலுக்கு ஏதுமின்றி .இவர் யாரோ?எவரோ?

இனியவர் இவர் எவருக்கும் அருங்கனி தமிழ்
கனிந்து ஆக்கங்கள் அளிக்கும் நமது தோழர்
இனியவன் வாழ்த்துக்குரியவர் . வாழ்த்துவோம்
இனியும் தாமதமின்றி விருதளிப்போம் வாரீர்.!

==============================================

5869 ஆக்கங்கள் இந்நாள் வரை அளித்து 46897 புள்ளிகள் பெற்று 481680 முகங்களால் ஆக்கங்களை காண வைத்த ..............

தோழர் கே. இனியவன் 2014ஆம் ஆண்டின் முதல் விருதை பெறுகிறார்...........
************** மிகு நிறை ஆக்க மாமணி...2013 ********...

====================================

வாழ்த்துவோம் ....வாரீர்...

எழுதியவர் : அகன் (14-Dec-13, 9:08 pm)
பார்வை : 158

மேலே