அம்மாவின் நினைவுகள்
நினைவு தெரிந்த நாள் முதலா
நீதானே என்னுடைய தெய்வம்...
நெற்றி முத்தமிட்டு தொட்டு அணைத்தாலே
நித்திரைகொள்வேனே அம்மா..
அயராது நீ உழைத்து என்னை
அன்பாய் காத்தாயே அம்மா....
அழுது புலம்புகிறேன் இன்று உன்
அன்பை தேடியே....
உன் கால்தடம் பதிந்த மண்ணையெல்லாம் எடுத்து
என் வீட்டு பூசையறையில் வைத்து வணங்குகிறேன்...
உன் புன்னகையெல்லாம் இன்றும்
என் கண்முண்ணே தோன்றுதம்மா...
கல்லறையில் துயிலும் நீ என்
கருவறையில் தொன்றுவாயா என் மகளாய்....
கடவுளை வேண்டுகிறேன்....