வென்று விடு

எதிர்க்கும் பகையை
வென்று விடு!

குத்திய முள்ளுக்கும்
முத்தம் கொடு!

நடக்கும் பாதைக்கும்
பயத்தை கொடு!

சுற்றும் பூமிக்கு
ஆணையிடு!

எது நிஜம் என்பதை
தொட்டு விடு!

நடப்பது நடக்கட்டும்
என்பதை விட்டுவிட்டு!

விதி வலியதென்றால்
செருப்பை எடு!

எட்டும் தூரம் தான்
வெற்றி கனியை எடு!

பெற்றவர்களே!
சீக்கிரம் ஆசி கொடு!

* * * *

நீ ஏறத் துணிந்து விட்டால்
இமயமலையும் உயரமில்லை!

பறக்க துணிந்து விட்டால்
இறக்கை கூட தேவையில்லை!

நீ உழைக்க தொடங்கி விட்டால்
தெய்வங்கள் கூட தேவையில்லை!

* * * *

நீ சிந்திக்க மறுத்துவிட்டால்
சிரிப்புகூட செலவாகும் !

நீ நடக்க மறுத்துவிட்டால்
படுக்கை கூட நரகமாகும் !

நீ சிந்த மறுத்துவிட்டால்
வியர்வை கூட விஷமாகும் !

நீ வாழ்க்கையை ரசிக்காவிட்டால்
பூக்கள் கூட பிணமாகும்!

* * * *

நீ விட்ட கண்ணீரில்
கடலும் கசத்து போச்சு!

உறங்கியதால் தான்
இந்தியா
நூறாண்டு அடிமையாச்சு!

ஆயிரம் சட்டங்கள்
அத்தனையும் ஒட்டையாச்சு!

தர்மம் ஜெயிக்கும்
என்ற காலம் போச்சு!

இனியும் வேண்டாம்
வெறும் பேச்சு!

ஒரு நொடி உறக்கமே
அதிகமாச்சு!

காற்றை தவிர
மற்றவை கைவிட்டாச்சு!

சுதந்திரம் பெற்றது
கனவாய் போச்சு!

புது விடியல் வேண்டியது
அவசியமாச்சு!

முத்தெடுக்கும் கனவில்
கரைக்கு வந்தவனே !

முத்தெடுக்கவோ!
இல்லை
பிள்ளை பெற்றெடுக்கவோ!
முயற்சி செய்தால் மட்டுமே
சாத்தியமே!

* * * *

கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (15-Dec-13, 8:38 am)
Tanglish : vendru vidu
பார்வை : 78

மேலே