கடவுள் கைது செய்யப்பட்டான்
அன்று ஒருநாள்!
கடவுளை கைது செய்து
கையிலே விளங்கு பூட்டி
நீதி மன்றத்திலே
நிறுத்தப்பட்டான்!
செய்த குற்றங்களை
ஒப்புகொள்கிறாயா?
வினவினார் நீதிபதி !
என்ன குற்றம் செய்தேன்?
பரிதாபமாய் கடவுள்!
செய்த குற்றங்கள்
ஒன்றா இரண்டா !
அடுக்கி வைத்தார்
வழக்குரைஞர்!
ஊருக்கு ஒரு
பெயரை வைத்து
உலகை ஏமாற்றியது!
உயிர்கொல்லி நோய்களை
ஊருக்குள் உலவவிட்டது!
காணிக்கை என்றே
கைக்கூலி வாங்கி
கருணை காட்டியது!
பிறவி ஊனத்தை
உண்டாக்கி விட்டது!
விபத்துகள் ஏற்படுத்தி
உயிர் குடித்தது!
உங்கள் நீதிமன்றம்
மூடியே கிடப்பது!
பாவ கணக்கு
பார்காமலே இருப்பது!
இன்னும் எண்ணிலடங்கா
குற்றங்கள் என்றே
கொட்டி முடித்தார்!
கண்ணில் கண்ணீர் கசிய
கடவுள் கூறத்தொடங்கினார்!
ஊருக்கொரு பெயரை வைத்தது
நான் அல்ல நீங்கள்!
ஒழுக்க மற்ற உறவுகள்
பெருகிபோனால்
உயிர்கொல்லி நோய்கள்
உலவத்தானே செய்யும்!
காணிக்கை என்றே
கொள்ளையடிக்கும்
கூட்டமே!
காசு பார்த்து
கருணை காட்டவில்லை!
பெற்ற தாய்க்கு
எல்லா பிள்ளைகளும்
ஒன்று தானப்பா !
பிறவி ஊனம்
அறிவியலின் வீச்சு மனிதா!
வேகம் குறைத்தால்
விபத்துக்கள் இல்லையப்பா !
செய்த செயலுக்கும் !
சொல்லிய சொல்லுக்கும் !
எண்ணிய எண்ணத்திற்கும் !
சரியான தீர்ப்பு
நிறைவேற்றப்படுகிறது மனிதா!
என்றே கூறிமுடித்தார்!
வாய்பேச்சு வித்தைக்காரன்
தப்பிக்க பார்க்கிறான்!
என்றே
கைது செய்ய உத்தரவிட்டார்!
நீதிபதி!
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போனார் கடவுள்!
அன்று தலைமறைவான கடவுள்
இன்றுவரை தலைமறைவாகவே ! ! !
கோடீஸ்வரன்