உனக்கின்னு எழுதிவச்சேன்
உனக்கின்னு எழுதிவச்ச கவிதையெல்லாம்
வீணாகப் போகுதுன்னு
எடைக்குத்தானே போட்டுவிட்டேன்!
என்னைக்காவது உங்கிட்ட அதுகிடைச்சா
அப்பவாது புரிஞ்சுப்ப - அப்படித்தான்
நான் நினைச்சேன்
பொரிகடலைப் பொட்டணமா
பொதிஞ்சு வச்சுப் பத்திரமா
வீட்டு்க்குள்ளே வந்திடுச்சே
படபடத்து துடிச்சிப்போயி
எடுக்கலான்னு நினைக்கிறப்போ,
பொண்டாட்டி பார்த்துப்புட்டா !- படிச்சி
ஒத்தவரியில் முடிச்சிபுட்டா
மாமா! கடலைவிக்கிற புள்ளைக்கு
எவனோ கடிதாசி கொடுத்திருக்கான்...