என் தேவதைக்கு வாழ்த்துக்கள்

என்னை
தேடி தேவதை வருவாள்
என காத்திருந்தேன் என் காத்திருப்புக்கும்
பலன் கிடைத்தது

ஆம்
என்னை தேடி ஒரு
தேவதை வந்தாள் அதுவும்
என் மணைவியாக

என் நடை
என் உடை
என் பாவனைகள்
எல்லாவற்றையும் மாற்றி அமைத்தால்

என் கஷ்ட, நஷ்டங்களை
சரிசெய்தால்

அன்புக்கு தாயாகவும்
காதலுக்கு மனைவியாகவும்
இருந்தால்

எங்கள் காதலின் அடையாளமாக
இரண்டு காதல் பரிசுகளை
பெற்றெடுத்தாள்

வாழ்க்கையின் அர்த்தம்
இல்லறத்தின் இன்பம்
வெற்றியின் ரகசியம்
அத்தனையும் கற்றுகொடுத்த
என் அன்பு மணைவிக்கு

என் காதலாலான
காதலர் தின
நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
நந்தி ....

எழுதியவர் : நந்தி (31-Jan-11, 5:59 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 396

மேலே