என் அறைக்குள் நுழைவதற்கு முன் சற்று தாமதியுங்கள்
என் அறைக்குள் நுழைவதற்கு முன் சற்று தாமதியுங்கள்.......
உங்களுக்கு பிடிக்காத தனிமையும் வெறுமையும் லேசான இருளும் கொண்டு என் அறை சூனியமாய் இருக்கும்.....
உங்களுக்காக என் ஜன்னலின் திரைச்சீலைகளை இன்றுமட்டும் விலக்கி விடுகிறேன்.......
என் வாசங்கள் நிறைந்து கிடக்கும் அறைக்குள் உங்களுக்காக மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிவைக்கிறேன்.......
என் அறையின் கனத்த மௌனத்தை கலைத்துவிடாதிர்கள்......
நீங்கள் சென்றதும் வெறுமைகள் மீண்டும் என்னுடன் பேசத்தொடங்கிவிடும்.........