காலம் வேகமானது

(வெளிநாட்டில் காதலன், காதலியின் பிரிவால்
இறந்தகால நினைவுகளை அசைபோடுசிறான்)
சாலையில்
வளைந்து வளைந்து சென்றபோதும்
மேடுபள்ளம் ஏறி இறங்கும் போதும்
வேகத்தடையில் நகரும் போதும்
முதுகிலே சாய்ந்து கொண்டு
திட்டுவதாய் நினைத்து
காதோரமாய் பாடினாய்
இறுக பிடித்து இடையில் செல்லமாய் கிள்ளினாய்
எதிரே உன் வெட்கம் பார்த்து
வந்தவர்களின் பார்வை மாற
சென்றவர்களின் கவனம் சிதற
மணித்துளிகள் மழைத்துளியாய் கறைய
உந்தன் விழிகளில்
என்னை மட்டுமே நோக்கினாய்
எந்தன் அசைவுகளை
மட்டுமே ரசித்தாய்
வலதுப்றக் கண்ணாடியில் -எந்தன்
வாழ்க்கையை பார்த்துக்கொண்டே
நீ சொல்லும் வார்த்தைக்கெல்லாம்
தலையை அசைத்துக் கொண்டே
பூக்கள் நிறைந்த இதயத்துடிப்பின்
பூரிப்பை வியந்து கொண்டே
கடந்த பாததைகள் .............அன்று
கண்களில் வேர்வைத்துளிகள்
மனதில் கனத்த பாறை
உடலிலே உறைந்த இரத்தம்
தனிமை என்னும் தவிப்பில் ........இன்று
காலம் வேகமானது