பாடம் புகட்டிய விதம்
அழகிய மலர் ஒன்று கண்டேன்
நறுமணம் பரப்பும் விகிதத்தை நோக்கினேன்
பட்டு இதழ் ஒன்றை தொட்டேன்
பஞ்சை விட மென்மையான நிலையை அறிந்தேன்
பச்சை இலை ஒன்றை தடவினேன்
வழுக்கும் நிமித்ததை தெரிந்து கொண்டேன்
நீண்ட கொடியை வருடினேன்
நெக்குருகும் தன்மையை உணர்ந்தேன்
பொடிதான வேரை துழா வினேன்
அதன் பிடிமானத்தை எண்ணி வியந்தேன்
சிறு செடி என்று நினைத்தேன்
அது எனக்கு பாடம் புகட்டிய விதமே அருமை