வளர் பிறை-18

கதவு இடிக்கும் சத்தம் கேட்கவே தினகரன், கணேஷ் மற்றும் அவனின் நண்பன் மூவரும் திகைத்து நின்றனர்

"சார் யாரோ,,,,,,,,,,,?"- சொல்ல வந்தான் தினகரன்

சத்தம் வேண்டாம் என்பதை சைகையால் சொன்னான் கணேஷ், பின் மெல்ல நடந்து அந்த கதவின் ஓரம் வந்தான்

அங்கே,,,,,,,,,,,,,,,,,, யாருமில்லை கதவு காற்றில் தானே இடித்து கொண்டிருந்தது,,,

"ச்ச இது தானா"- எல்லோர் மனதிலும் ஒரு அலட்சியம்

"சரி சார் நீங்க சொல்ற மாதிரி இந்த போதை மருந்து கலந்த சாக்லேட்ஐ நான் எல்லா மாணவர்களுக்கும் குடுக்குறேன்,,, அதுக்கு,,,,,,,,,,"- இழுத்தான் தினகரன்


"இதுல உங்களுக்கு பணம் ஏதும் இல்ல"- சடாரென சொன்னான் கணேஷ்

"என்ன சார் சொல்றீங்க"

"ஆமா,,,,,,,, பணத்துக்கு பதிலா இந்த ஸ்கூல் நிர்வகிக்கிற பொறுப்பு பிளஸ் வர லாபத்துல ஒரு ஷேர்"- சொல்லிவிட்டு சிரித்தான் கணேஷ்

"ரொம்ப தேன்க்ஸ் சார்,,,"- எதிர்கால தலைமுறை அழிவை பற்றி கவலை இன்றி தனக்கான லாபம் பற்றி நினைத்து மகிழ்ந்தான் தினகரன்


அப்போது துரதிஷ்ட்ட வசமாக பேனாவில் இன்க் நிறைத்த படி அங்கு வந்து நின்றாள் ஜெனி

இவர்களின் திட்டம் முழுவதும் இப்போது அவள் செவிகளில்,,,,,,,,,, அதை எல்லாம் கேட்ட ஜெனிக்கு ஆத்திரம் எரிமலையாய் மாறினாள்


"ச்ச நீயெல்லாம் ஒரு டீச்சர் உன்கிட்ட படிக்கிற மாணவர்களோட எதிர்காலத்த பத்தி யோசிக்காம கண்டவன்களோட சேந்து கிட்டு எங்க வாழ்க்கையை ஏன் டா அழிக்கிற "

பாய்ந்து கணேஷின் சட்டையை பற்றினாள்,"நீ எல்லாம் என்ன ஜென்மன் டா ,,,,,,,, காசுக்கு தான் கல்வின்னு புனிதமான கல்விய வியாபாரம் ஆக்கிட்டீங்க,,,,,,,,, சில அப்பாவி பொண்ணுகள ஏமாத்தி அத விபச்சாரமாவும் ஆக்கிட்டீங்க,,,, இதெல்லாம் போதாதுன்னு இப்போ மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி அவங்க எதிர் காலத்தையே அழிக்க பாக்குறீங்களா,,,,,,,,

சும்மா விட மாட்டேன் டா உங்களையெல்லாம் போலீஸ்-ல புடிச்சி குடுக்குறேன் பாருங்க டா,,,,,,,,,"- கர்ஜித்தாள் ஜெனி

அங்கிருந்து நகர முயற்ச்சித்தாள்,,, அதற்குள் அவளை கொல்லவே திட்டம் தீட்டி விட்டனர் மூவரும்,,,,,,,,,

"எங்க மா உன்ன விட்டா தானே நீ போய் போலீஸ்-ல சொல்லுவ"- நக்கலாக கூறி அவளை இழுத்தான் அந்த மூன்றாமவன்

"என்ன விடு விடு டா ராஸ்கல்"

"அட,,,,,,,ம்ம்ம்ம்ம்ம்ம் "- என்றவாறே அவளை மேலும் கீழும் பார்த்தான்

"ஏன் தினகரன் சார் இப்படி ஒரு பட்சி இந்த ஸ்கூல்-ல படிக்குதுன்னு நீங்க சொல்லவே இல்ல"- அவனது பார்வை வக்கிரமாக மாறியது

"த்தூ,,,,,,,,,,"- அவன் முகத்தில் காரி உமிழ்ந்தாள் ஜெனி

அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது,,,,,, அந்த கோபத்தில் அவளை அடைய முயன்றான்

அவனை தள்ளி விட்டு திறந்திருந்த வாசல் வழி ஓடினாள் ஜெனி,,,,,,,

மூவரும் அவளை துரத்தினார்கள்,,,,,, வேறு வழி இன்றி அவள் இன்க் நிரப்பிய அறையில் சென்று ஒளிந்து கொண்டாள்

"எங்க டா போயிருப்பா,,,,,,"

" அவ இங்கிருந்து போயிருக்க முடியாது இங்கதான் எங்கையாவது ஒளிஞ்சிருப்பா,,,,,, தேடு கணேஷ் இல்லன நாம மாட்டிக்குவோம் "

அந்த தேடலில் அவர்களே வென்றார்கள்,,,,, அந்த மூன்றாமவன் ஜெனியை கண்டு பிடித்து விட்டான்

பின் அங்கு நடந்ததெல்லாம் அக்கிரமத்தின் உச்சகட்டம்.,,,,,,,, அந்த பச்சை கிளை மூன்று ஓநாய்களுக்கு பலியானது

நினைவலைகள் ஓய்ந்தது,,,,, நிஜத்தில்,

"அப்பறம் தான் தினா எனக்கு போன் பண்ணுனான் நான் போனப்ப அந்த பொண்ணோட உடம்ப தினாவும் இந்த வாட்ச்மேனும் தூக்கிட்டு வந்து என் வண்டில வச்சாங்க நான் அதை கொண்டு போய் பொதச்சிடோம்"- சொல்லி முடித்தான் செல்வம்

அவனுக்குள் செலுத்தப்பட்ட விஷ ஊசி இப்போது மெல்ல அவன் உயிரை குடிக்க ஆரம்பித்தது அதன் எதிரொலியாய் அவன் வாயில் இரத்தம்


(வளரும்,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (18-Dec-13, 3:03 pm)
பார்வை : 178

மேலே