சிலை செதுக்கி வைத்தாய்
உன்..
கரு கொண்ட
உயிர் கொண்டு
சிலை செதுக்கி வைத்தாய்..
மரபு..
மனம் கண்ட
உரு கொண்டு
சிலை செதுக்கி வைத்தாய்..
சிறு..
உயிருக்கு
வலிக்காமல்
சிலை செதுக்கி வைத்தாய்..
பல..
மாதங்கள்
தவமிருந்து
சிலை செதுக்கி வைத்தாய்..
மன..
வேதனைகள்
பல சுமந்து (மறந்து)
சிலை செதுக்கி வைத்தாய்..
படி..
வேண்டுதல்கள்
பல வைத்து
சிலை செதுக்கி வைத்தாய்..
உயிர்
தியாகத்தை
எதிர்கொண்டு
சிலை செதுக்கி வைத்தாய்..
தாயே..
நீ செதுக்கி வைத்த
சிலை ஒரு நாள்..
கண் திறந்து பார்க்கும் நொடி..
உயிர் மறந்து..
உளம் குளிர்ந்து..
மனம் முழுதும் இன்புறுவாய்..
அந்த
இன்பத்தின்
காரணியாய்
நான் இருக்க
என்ன தவம் செய்தேனோ..