காதல்
உன் பார்வையின் பொருளே விளங்க வில்லை
நி பார்க்கும் விதமோ புரியவில்லை
கண்களில் பேசும் காவியமே – உன்
கருவிழி அசைவுகள் தெரிகிறது - அது
கூறும் வார்த்தையை அறியவில்லை
இனி ஒரு பெண்ணிற்கு இடம் இல்லை என
இருட்டறையில் என் இதயம் வைத்தேன்
மெழுகை கொண்டு ஒளி தந்து
நீயே அதனுள் குடி வந்தாய்